ad-world
ad-world
about us

செயல்பாடுகள்

இவ்வமைப்பின் கீழ் 'ஓர் இனிய ஞானாலயம்' என்ற பெயரில் நாகர்கோவில் நகரில் முதல்தரமான மாலை நேர நூலகமாக இயங்கி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க சில நூல்களாக

 • Travancore State Manual (1940)
 • கலைக்களஞ்சியம்(1955)
 • இந்திய நீதித்துறை - வி.ஆர். கிருஷ்ணய்யர்
 • புதிய நூற்கள் நமது நீதித்துறை - பி.ஆர். அகர்வாலா
 • தகவல் உரிமைச்சட்டம் அறிமுக நூல் (2013)
 • சுச்சிப்பாண்டே சேகர்சிங்
 • மேலும் கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மீகம், நாவல், சிறுகதைகள் தொடர்பான பல நூல்களும் உள்ளன
 • I.A.S, IPS வங்கித்தேர்வு TNPSC தேர்வுகள் போன்ற தேர்வுகளுக்கான அரியவகை நூல்களும் இடம் பெற்றுள்ளன.

இன்றே உறுப்பினராகச் சேருங்கள்! அறிவுவளம் பெறுங்கள்!

நூல் திறனாய்வு இவ்வமைப்பின் புதிய திருப்புமுனை இளைஞர்களிடையே வாசிக்கும் திறன் குறைந்து வருகிறது. இதனை நோக்கமாகக் கொண்டு புதிய நூல்களை வாசித்து ஆய்வு செய்ய ஒரு அரங்கம் அமைத்துத் தருகிறது. மாதமொரு முறை ஏதேனும் ஒரு கல்லூரியில் அம்மாணவர்களை, ஆசிரியர்களை உட்படுத்திய ஓர் அரங்கமாக இது அமைகிறது. ஒருவர் ஒரு நூலைத் திறனாய்வு செய்யப் பிறர் அதை கூர்ந்து கவனித்து, கேள்விகளுடன் தெளிவு பெற வாய்ப்புள்ளது. பன்முகப் பரிணாமங்களோடு வளர்ந்து வரும் ஓர் அமைப்பாக இது விளங்குகிறது.
பங்கு பெறுங்கள்! பயன் பெறுங்கள்!!

சிறந்த கவிதை தேர்வில் கலந்து கொள்வோருக்கான விதிமுறைகள்

 1. தாங்கள் அனுப்பும் கவிதைகள் A4 அளவில் 24 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
 2. கவிதைகளை அனுப்புவோர் ஓவ்வொரு கவிதையையும் தனித்தனி 4 பிரதிகளாக அனுப்புதல் வேண்டும். இதில் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அனுப்ப வேண்டும்.
 3. கவிதைகளில் அரசியல், தனிநபர் துதி தவிர்க்கப்பட வேண்டும்.
 4. ஏற்கனவே வெளிவந்த கவிதைகளாக இருத்தல் கூடாது.
 5. கவிதை அனுப்புவோர் ஊக்கத் தொகையாக ரூபாய் 300/- மட்டும் தெ.வே. பகவதி பெருமாள் என்ற பெயருக்கு மணியார்டர் அல்லது வங்கி வரைவோலை மூலமாக அனுப்பபட வேண்டும்.
 6. தாங்கள் அனுப்பும் கவிதை பிரதிகளில் பெயர், முகவரி மற்றும் கைப்பேசி எண்ணைத் தவறாது குறிப்பிடல் வேண்டும்.
 7. தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும் சிறந்த மூன்று கவிதைகளுக்கு மட்டும் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் விழாவில் கவிமணி தேசிய விநாயகம் பெயரில் விருது மற்றும் பொற்கிழி வழங்கப்படும்.
 8. ஆண்டு தோறும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டு மொட்டும் மலரும் என்ற பெயரில் கவிதைத் தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டு, போட்டியில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் தபால் மூலம் அனுப்பித் தரப்படும்.

சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதுகள் - கலந்து கொள்வோருக்கான விதிமுறைகள்

 1. குறிப்பிடப்பட்ட ஆண்டு எல்லைக்குள் வெளி வந்த நூலாக இருத்தல் வேண்டும்.
 2. வரலாறு, புதினங்கள், சிறுகதைகள் அல்லது கட்டுரைகளின் தொகுப்பு நூல்கள், கவிதை தொகுப்பு நூற்கள் அனுப்பப் படலாம்.
 3. போட்டியில் கலந்து கொள்வோர் விண்ணப்ப படிவத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் போட்டிக்காக அனுப்பபடும் புத்தகத்தின் 3 பிரதிகள் தவறாது அனுப்பபடல் வேண்டும்.
 4. சுயமுகவரியிட்டு 5 ரூபாய் தபால்தலை ஒட்டிய தபால் உறை அனுப்பப்படல் வேண்டும்.
 5. கடிதத்துடன் தொலைபேசி எண்ணைத் தவறாது குறிப்பிடல் வேண்டும்.
 6. போட்டியில் கலந்து கொள்வோர் பதிவு கட்டணமாக ரூபாய் 100/- மட்டும் “தெ.வே. பகவதி பெருமாள்” என்ற பெயருக்கு மணியார்டர் அல்லது வங்கி வரைவோலை மூலமாக அனுப்பப்பட வேண்டும்.
 7. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் தலைமையில் அமைக்கப்பட்ட நால்வர் கொண்ட தேர்வுக்குழு சிறந்த நூற்களைத் தேர்ந்தெடுக்கும். தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.
 8. தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும் சிறந்த நூற்களுக்கு ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் விழாவில் கவிதை நூலுக்கு “கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை” பெயரிலும், வரலாற்று நூலுக்கு “தினமலர் இராமசுப்பையர்” பெயரிலும், இலக்கிய நூற்களுக்கு “சுந்தர ராமசாமி” பெயரிலும் விருது மற்றும் பொற்கிழி வழங்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி

'கரு ஒன்று கதை இரண்டு' என்னும் தலைப்பில் 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்' என்னும் குறள் கருவை மையப்பொருளாகக்கொண்டு வித்தியாசமான இரு சிறுகதைகள் அனுப்பப்பட வேண்டும். A4 தாளில் 5 அல்லது 6 பக்கத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட இரண்டு கதைகளுக்கு பொற்கிழியும், விருதும் இராமச்சந்திரா ஆதித்தனார் பெயரில் வழங்கப்படும். மேலும் நுழைவுக்கட்டணமாக ரூ.100/- (MO or DD) தெ.வே. பகவதி பெருமாள் பெயருக்கு அனுப்பப்படவேண்டும். கல்லூரி மாணவர்களுக்கான அத்தாட்சி இணைத்திட வேண்டும்.