ad-world
ad-world
about us

எங்களைப் பற்றி

எனது அன்புக்குரிய தமிழ் நெஞ்சங்களே
இணையதளத்தோடு இணைந்திருக்கும் இனியவர்களே
நின்று நிதானித்துக் கூர்ந்து கவனித்துப்பாருங்கள்.

மூத்தோர்கள் சிலரால் இளையோருக்குத் தடம் அமைக்கும் ஒரு சீரிய அமைப்பான இது தியாகி கவிஞர் தெ. வே. பகவதிப்பெருமாள் அவர்களின் ஓய்வில்லாத ஓட்டத்தால் 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடித்தளம் அமைத்து சிகரங்கள் நோக்கி வளர்ந்து கொண்டே செல்லும் அமைப்பு ஆகும். இவ்வமைப்பிற்கு ஊன்றுகோல்களாக நிற்பவர்கள் பலர்.

about us

இவ்வமைப்பின் நோக்கம்

  1. தமிழை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச்செல்லுதல்
  2. தமிழை அழியாமல் காக்க ஆவனச் செய்தல்
  3. புதிய படைப்பாளிகளை உருவாக்குதல்
  4. இளம் படைப்பாளிகளை ஊக்குவித்தல்
  5. புதிய சாதனையாளர்களை உருவாக்குதல்
  6. சிறந்த எழுத்தாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் விருது வழங்குதல்
  7. நலிந்த கலைகளை ஊக்குவித்தல் (ஓவியம்; பரத நாட்டியம்)
  8. ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஊக்குவித்தல்
  9. மாவட்டம் மாநிலம் மற்றும் உலக அளவில் கலை இலக்கியங்களை மேம்படுத்தல்
  10. "கரு ஒன்று - கதை இரண்டு" நிகழ்வுகள் மூலம் திருக்குறளைப் பரப்புதல்
  11. கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடல்
  12. தியாகச் செம்மல்களின் திருவுருவப்படங்களைத் திறந்து வைத்து இளையோருக்கு அறிவுறுத்தல்
  13. பல்வேறு துறைசார்ந்த முன்னோடிகளின் நூல்களைத் தொகுத்து உதவுதல்
  14. ஆண்டுதோறும் விழா எடுத்தல்
  15. விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தி சான்றிதழ் மற்றும் பொற்கிழி பரிசாக வழங்குதல்